சுந்தர்பிச்சையிடம் கைவரிசையை காட்டிய ஹேக்கர்கள். அதிர்ச்சியில் கூகுள் நிறுவனம்
இணையதளங்களின் பயன்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது போலவே இணையதள திருடர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரபலங்களின் இணையதளங்களை ஹேக்கர்கள் குறிவைப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸ்கர்பெர்க்கின் டுவிட்டர் மற்றும் பின்ட்ரெஸ்ட் கணக்குகளை அவர்மைன் என்ற ஹேக்கர் குழு முடக்கிய நிலையில் தற்போது அதே குழு கூகுள் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் குவோரா கணக்கினுள் நுழைந்து செய்திகளை பதிவு செய்துள்ளது. அவரது குவேரா பதிவுடன் இணைக்கப்பட்டிருந்த டுவிட்டுகள், அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் இருப்பதைப்போன்றே தெரிந்தது. இதன்மூலம் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக செயல்பட்ட கூகுள் அதிகாரிகள் சுந்தர் பிச்சையின் கணக்கை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும் அதில் உள்ள டுவிட்டுகள் சில மணி நேரத்தில் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் கணக்கிலேயே ஹேக்கர்கள் ஊடுருவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.