பிரதமருடன் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர்பிச்சை சந்திப்பு
கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த சுந்தர்பிச்சை நேற்று பாரத பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுந்தர் பிச்சையுடனான சந்திப்பு தனக்கு மகிழ்ச்சியை தந்ததாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இணையத் தேடு பொறி தொழில் நுட்பத்தில் உலகில் முதன்மை நிறுவனமாக திகழும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை, இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்துள்ளார். முன்னதாக டெல்லியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய சுந்தர்பிச்சை, “இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் தொழில் முனைவோராக மாணவர்கள் மாறவேண்டும் என்றும் அதற்கான வாய்ப்புகள் அனைத்தும் இந்தியாவில் அதிகம் உள்ளதாகவும் கூறினார்.
மேலும் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் மட்டுமே இணையத்தை பயன்படுத்துவதாக கூறிய சுந்தர் பிச்சை, இது இந்தியாவில் மேலும் அதிகமாக காணப்படுவதாக தனது வேதனை தெரிவித்தார்.
மேலும் முப்பது பல்கலைக்கழக மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்ட்ராய்டு டெவலப்பர் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதன்மூலம் இரண்டு மில்லியன் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
English Summary:Google CEO Sundar Pichai meets PM Narendra Modi