“கூகுள் தான் உலகின் மிக பெரிய தேடு பொறி..!” என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் சத்தம் போடாமல், கூகுளை காலி செய்து கொண்டிருக்கிறது ஃபேஸ்புக் என்பதுதான் உண்மை..! ஃபேஸ்புக்கில் ‘ஷார்ட்-கட் கீ’ இருப்பது உண்மைதான்..! ஃபேஸ்புக் மற்றும் கூகுளுக்குள் அப்படி என்ன தான் ‘வாய்க்கால் தகராறு’ என்பதை கீழ் வாரு ஸ்லைடர்களில் காணலாம் வாங்க..!
சமீபத்திய ஆய்வு ஒன்று, கூகுள் நிறுவனத்தை சற்று உஷாராக இருக்க சொல்லும் படியான முடிவுகளை வெளியிட்டுள்ளது..!
அதாவது, மக்கள் செய்திகளை வாசிக்க கூகுளை விட ஃபேஸ்புக்கை தான் அதிகம் பயன் படுத்துகின்றன்றார்களாம்..!
செய்திகள் சார்ந்த வர்த்தகம் (Traffic) கூகுளை விட ஃபேஸ்புக்கில் தான் அதிகம் நடக்கிறதாம்..!
ஃபேஸ்புக்கில் ‘ஷேர்’ (Share) செய்யபடும் செய்திகள் சார்ந்த ‘லின்க்ஸ்’ (Links) தான், பெரிய அளவிலான வர்த்தகத்தை நிகழ்த்த காரணம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!
மறுபக்கம் செய்திகளை கூகுள் தேடுபொறியில் தேடித்தேடி படிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறதாம்..!
இந்த ஆய்வை நடத்தியது பகுப்பாய்வு (Analytics) தொழில் நிறுவனமான பார்ஸ்.லி (Parse.Ly) என்பதும் குறிப்பிடத்தக்கது..!
பார்ஸ்.லி நிறுவன ஆய்வின்படி செய்திகள் சார்ந்த தேடலில் ஃபேஸ்புக் ஆனது கூகுளை விட அதிக வர்த்தகத்தை நிகழ்த்தி உள்ளதாம்..!
அதாவது ஃபேஸ்புக் – 43% டிராஃபிக்கையும், கூகுள் – 38% டிராஃபிக்கையும் நிகழ்த்தி உள்ளனவாம்..!
மேலும் ஃபேஸ்புக், கூகூளை முந்தி செயல்படுவது முதல் முறை ஒன்றுமில்லை என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது..!