கூகுள் செய்தி நிறுவனத்தின் சீனியர் துணை தலைவர் 57 வயதான ஆலன் எஸ்டாஸ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் நியூமெக்சிகோ என்ற இடத்தில் விண்ணில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாதனை செய்தார்.
பாரகான் விண்வெளி வளர்ச்சி கார்பரேசன் என்ற தனியார் நிறுவனம் நடத்திய போட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆலன் எஸ்டாஸ், ஹீலியம் பலூனில் பூமிக்கு மேலே 40 கி.மீட்டர் உயரத்துக்கு பறந்து சென்றார். பின்னர் அங்கிருந்து பாராசூட் மூலம் மணிக்கு 1300 கி.மீட்டர் வேகத்தில் கீழே குதித்து சாதனை படைத்தார். இவர் 1 லட்சத்து 35 ஆயிரத்து 890 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரியாவை சேர்ந்த பெலிஸ் யாம் கார்னர் 1 லட்சத்து 28 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்ததுவே இதுவரை சாதனையாக இருந்தது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1wrdzrT” standard=”http://www.youtube.com/v/AsftfzBrVko?fs=1″ vars=”ytid=AsftfzBrVko&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep2399″ /]