கூகுள் மாடுலர் ஸ்மார்ட் போன்

modular_2365406f

ஸ்மார்ட் போனை தனித்தனி பாகங்களாக பிரித்து இணைத்துக் கொள்ளும் மாடுலர் ஸ்மார்ட் போனை தயாரித்து வருகிறது கூகுள். மோட்டோரோலோவிடம் இந்த திட்டம் இருந்தது.

மோட்டோரோலா நிறுவனத்தை வாங்கிய பிறகு தற்போது இந்த திட்டத்துக்கு கூகுள் செயல்வடிவம் கொடுத்து வருகிறது.

போனில் ஒவ்வொரு பாகத்துக்கும் தனித்தனி இணைப்புகள். மேற்பாகம் உள்ள ஸ்கிரீன் தவிர பிற பாகங்கள் அனைத்தும் இணைப்புகள்தான். உதாரணத்துக்கு இந்த போனில் செயல்படும் கேமராவை மட்டும் தனியாக பிரித்து எடுத்து விடலாம். கேமரா இல்லாமல் போனை இயக்கலாம்.

கேமராவின் திறன் அதிகரிக்க வேண்டும் என்றால், உதிரி பாகமாகக் கிடைக்கும் திறன் அதிகமாக உள்ள கேமராவை பொருத்திக் கொள்ளலாம்.

அதுபோல மெமரி கார்டு பயன்படுத்தும் பாகம் என எல்லாமே தனித்தனி இணைப்புகள்தான். இணைப்புகள் ஒன்றையொன்று சர்க்யூட்டுகள் மூலம் இணைக்கப்படுகிறது.

போனில் ஏதேனும் பழுது என்றால் போனை கொடுத்துவிட்டு காத்திருக்கத் தேவையில்லை. குறிப்பிட்ட பாகத்தை கழற்றி வீசிவிட்டு வேறு பாகத்தை பொருத்தினால் போதும்.

Leave a Reply