கூகுள் நிறுவனம் மீது வழக்கு. சி.பி.ஐ அதிரடி

google
இந்தியாவின் சர்வே ஆஃப் இந்தியா  என்ற அமைப்பு கூகுள் நிறுவனம் மீது அதிரடி குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளின் ரகசியத் தகவல்களை கூகுள் இணையதளம் தொடர்ந்து வெளியிட்டு வருவதாகவும், இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பலவீனமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வே ஆஃப் இந்தியா அமைப்பின் சர்வேயர் ஜெனரல் சுவர்ணா சுப்பா ராவ் புதுடில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்  “இந்தியாவில் வரைபடப் போட்டி வைத்து, அதன் மூலம் கூகுள் நிறுவனம் இந்தியாவின் ரகசிய பகுதிகளில் உள்ள தகவல்களை திரட்டி வருகிறது. இந்த ரகசிய தகவல்களை கூகுள் மேப் வசதியின் மூலம் உலகில் உள்ள அனைவரும் பார்த்து வருகின்றனர். இதுகுறித்து எங்களுக்கு தகவல் கிடைத்ததும், உடனடியாக இதை நிறுத்தும்படி கூகுளிடம் வலியுறுத்தினோம். ஆனால் கூகுள் நிறுவனம் எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளாமல், தொடர்ந்து கூகுள் மேப் பகுதியில் நாட்டின் முக்கிய பகுதிகள் குறித்து பதிவு செய்து வருகிறது.

இதுகுறித்து இந்திய நில அளவியல் அமைப்பு அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு கூகுள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

Leave a Reply