கூகுள் நிறுவனத்தின் இலவச வைஃபை வசதியை பெறும் 100 இந்திய ரயில் நிலையங்கள் அறிவிப்பு

கூகுள் நிறுவனத்தின் இலவச வைஃபை வசதியை பெறும் 100 இந்திய ரயில் நிலையங்கள் அறிவிப்பு
wifi
பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்போது அமெரிக்க சுற்றுப்பயணத்தில் உள்ளார். நேற்று முன் தினம் அவர் அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் 500 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளிவந்த ஒரே நாளில் கூகுள் நிறுவனம் வைஃபை வசதி செய்யவுள்ள 100 இந்திய ரயில் நிலையங்கள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த 100 ரயில் நிலையங்களின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த  சென்னை, கோவை, மதுரை, திருச்சி  ஆகிய ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் வைஃபை வசதி ஏற்டுத்தப்படவுள்ள 100 ரயில் நிலையங்களின் பட்டியலை கூகுள் நிறுவனத்தின் சி.ஐ.ஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள முதல்கட்ட பட்டியலில் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களுடன் கோவை, மதுரை திருச்சி ,ஈரோடு ரயில் நிலையங்களும் இடம் பெற்றுள்ளன. சென்னையை பொறுத்த வரை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில்  வைஃவை வசதி உருவாக்கப்படவுள்ளது.

முதல் கட்டமாக குறைந்தது தினமும் ஒரு கோடி மக்கள் கடந்து செல்லும் ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக வைஃபை வசதி உள்ள ரயில் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூகுள் நிறுவனத்தின் பிளாக்கில் அவர் மேலும் கூறியிருப்பதாவது  ” இந்தியாவிலேயே இதுதான் மிகப் பெரிய வை ஃபை இணைப்பு தளமாக இருக்கும். அதுபோல் உலகிலேயே அதிகம் பேர் வைஃபையை பயன்படுத்தும் திட்டமாகவும் இது மாறும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply