டிரைவர் இல்லாத கார் தயாரிப்பது தொடர்பாக ஃபோர்டு நிறுவனத்துடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரைவர் இல்லாத கார்களை இயக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார் தயாரிப்பு பிரிவானது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இன்கார்ப்பரேஷனின் தனி நிறுவனமாக செயல்படும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து கூகுள் நிறுவனம் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் உதிரி பாக சப்ளைதாரர்களுடன் டிரைவர் இல்லாத கார் தயாரிப்பது தொடர்பாக பேச்சு நடத்தியது. 2020-ம் ஆண்டுக்குள் டிரைவர் இல்லாத கார்களைத் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த பேச்சு வார்த்தைகளை கூகுள் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த நிலையில் டிரைவர் இல்லாத கார் தயாரிப்பது தொடர்பாக ஃபோர்டு மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இரு நிறுவனங்களிடையே இது குறித்த ஒப்பந்தம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.