இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டிற்காக கூகுள் நிறுவனம் பசுபிக் கடலின் அடியில் பதித்திருந்த கண்ணாடி இழைகளால் ஆன கேபிள்களை சுறாமீன்கள் கடித்து சேதப்படுத்தியதால் கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. சுறா மீன்கள் கேபிளை சேதப்படுத்தியதை அங்குள்ள கேமரா ஒன்றின் மூலம் கூகுள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
கடலின் அடியில் பதிக்கப்பட்டிருக்கும் இந்த கண்ணாடி இழைகள், எளிதில் சேதமாக்க முடியாத சூப்பர் கார்டு மெட்டிரியலை கொண்டு தயாரானது. மேலும் இந்த கேபிள்கள் புல்லட் புரூப், பாதுகாப்புடன் அமைக்கப்பட்டவை. ஆனாலும் கடலுக்கடியில் உள்ள பிரமாண்டமான சுறா மீன் ஒன்று இந்த கேபிள்களை கடித்து நாசப்படுத்தியுள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1m9RI1r” standard=”http://www.youtube.com/v/XMxkRh7sx84?fs=1″ vars=”ytid=XMxkRh7sx84&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep8301″ /]
சுறா மீன்களிடம் இருந்து கடலுக்கு அடியில் பொருத்தபட்டு உள்ள கேபிள்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து கூகுள் நிறுவனம் ஆய்வு செய்து வருகின்றது. இந்த கேபிள்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் சுறா மீன்களை கவர்வதால்தான் மீன்கள் கேபிள் அருகே வருவதாகவும், இந்த மின்காந்த அலைகளை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் கூகுள் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.