கூகுள் நிறுவனம் பலூன்கள் மூலம் தொலைதூர பகுதிகளுக்கு இண்டர்நெட் வழங்க திட்டமிட்டுள்ளது. அதாவது, பலூன்களை ஆகாயத்தில் பறக்க வைத்து அதன் மூலம் பல இடங்களுக்கு இன்டர்நெட் வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளது. இந்த லூன் திட்டம் 2013ம் ஆண்டின் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை எவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்பதை காண்பிக்கும் புதிய வீடியோவை அதன் கூகுள் ப்ளஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. உள்ளூர் இண்டர்நெட் மற்றும் தொலைத்தொடர்பு வழங்குநர்கள் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து இந்த மிஷனை உருவாக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதனால் உலகம் முழுவதும் எந்த அணுகல் இல்லாமல் இருக்கும் மக்கள் உள்பட அனைவருக்கும் மலிவாக இண்டர்நெட் வழங்கலாம். அதாவது, லூன் திட்டத்தின் மூலம் பலூன்களை காற்றில் மிதக்கவிட்டு அடுக்கு மண்டலத்தில் அனுப்பி உலகத்தின் தொலைதூர பகுதிகளில் இண்டர்நெட் வழங்க முடியும் என்று நம்புகின்றது. இந்த பலூன்கள் தரையின் பேஸ் ஸ்டேஷனுடன் இணைக்கப்பட்ட ஆண்டென்னாவை எடுத்து செல்கிறது.
உலகம் முழுவதும் மக்களுக்கு மலிவாக இண்டர்நெட் வழங்க உயரமாக பலூன்கள் பயன்படுத்தும் இந்த லூன் திட்டத்தை அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பூமியில் இருந்து 20 கிமீட்டர் தொலைவில் பலூன்களை பறக்க விட்டு சாஃப்ட்வேர் அல்கோரிதம் மூலம் காற்றை பொருத்து செயல்படும்.
இந்த திட்டத்தின் மூலம் நியுசிலாந்தில் 30 பலூன்கள் பறக்க விடப்பட்டது. மேலும், கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாள் ஒன்றுக்கு 20 பலூன்களை பறக்கவிட்டது. ஆட்டோஃபில் எக்யூப்மென்ட் மேம்படுத்தப்பட்டிருப்பதால் முன்பிருந்ததைவிட 10 மடங்கு அதிகமாக ஆகாயத்தில் நீடித்திருக்க முடியும். 2013ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட பலூன்கள் 100 முதல் 130 நாட்கள் வரை நீடித்திருந்ததாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகாயத்திற்கு அனுப்பப்பட்ட பலூன்கள் அடுக்கு மண்டலத்திற்கு சென்றதும், பலூன்களின் சரியான இடத்தை கூகுள் கண்காணிக்க முடியும், ஒரு பலூன் இறங்கும் போது அதற்கு பதிலாக மற்றொரு பலூன் அந்த இடத்தை தக்க வைத்துக்கொண்ட சரியான நேரத்தையும் கண்காணிக்க முடியும்.
ஒவ்வொரு பலூன்களும், நியூயார்க் நகர அளவை விட இரண்டு மடங்கு அதிகமான பகுதிகளுக்கு, சுமார் 1,250 சதுர கிலோமீட்டர் (780 சதுர மைல்) அளவுக்கு இண்டர்நெட் சேவையை வழங்க முடியும்.