டிரைவர் இல்லாத கார். ஜனவரி 1 முதல் சோதனை செய்ய கூகுள் நிறுவனம் முடிவு.

Google-X-Self-Driving-Carடிரைவர் இல்லாமல் தானாகவே இயங்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள காரை கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்தக் கார் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாலைகளில் பரிசோதனை செய்யப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரைவரே இல்லாமல் இருக்கும் இந்த கார்களில் ஸ்டியரிங், ஆக்சிலரேட்டர் பெடல், பிரேக் பெடல் ஆகிய எதுவுமே இருக்காது. முழுக்க முழுக்க மென்பொருள்களும் சென்சார்களுமே காரை இயக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஓட்டுனர் இல்லாமல் நவீன் தொழில்நுட்பங்களில் ஆன இந்த  கார்களை 2014ஆம் ஆண்டில்  இருந்தே கூகுள் சோதித்து வருகிறது என்றாலும் டிராபிக் உள்ள பகுதிகளில் இதுவரை சோதிக்கவில்லை. டிரைவர் இல்லாத கார்கள் நடைமுறைக்கு வரும் போது அது மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என வாகனத் துறை நிபுணர் மைக் ஹட்சன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1zdP4NN” standard=”http://www.youtube.com/v/6dwICYdETl0?fs=1″ vars=”ytid=6dwICYdETl0&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9395″ /]

Leave a Reply