இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் காய்கள் சதைப்பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவுகளாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ மஞ்சளாகவோ காணப்படும். நெல்லிக்காய் தைலமும் முடி வளர்ச்சிக்கும், உடல் உஷ்ணத்திற்கும் நல்லது.
கோடை காலங்களில் நமக்கு பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு நெல்லிகாய் நல்ல மருந்தாகும். மேலும் சிறுநீரகக் கோளாறு, இரத்த சோகை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு அருமருந்தாகிறது. நெல்லியில் உடலுக்கு அவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது.
உயிர்ச்சத்தான வைட்டமின் ‘சி’ சத்து இதில் நிறைந்துள்ளது. இலைகள், பட்டை, வேர், பூக்கள் மற்றும் அனைத்தம் மருத்துவ பயனுள்ள பகுதியாகும். நடுத்தர ஆரஞ்சு பழம் ஒன்றில் இருப்பதைப்போல இருபது மடங்கு வைட்டமின் ‘சி’ இதில் உள்ளது. “ஸ்கர்வி” என்ற தோல் நோய் இச்சத்து குறைவினால் தான் உண்டாகின்றது.
நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, கரிச்சத்து, சுண்ணாம்பு சத்து, தாதுப்பொருள், இரும்பு, நிக்கோடினிக் அமிலம் முதலியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில் கொலஸ்டிரால் படிதலை வைட்டமின் ‘சி’ தடுக்கிறது. இரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தை நெல்லிக்காய் விலக்குகிறது. பொதுவில் வாதமும் சமப்பட்டு விடுகிறது.
கர்ப்பிணிப் பெண்களும், காய்ச்சல் உள்ளவர்களும் நெல்லிக்காயை உண்ணக் கூடாது என்பார்கள். நெல்லிக்கனி நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவ குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும் ஈறுகளும் பலப்படுவதோடு, வாய் துர்நாற்றமும் போகும்.
உணவு செரிமானமின்மைக்கு எப்படி பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது.
இதில் அடங்கயுள்ள சத்துக்கள் :
புரதம் – 0.4 கிராம்.
கொழுப்பு – 0.5 கிராம்.
மாச்சத்து – 14 கிராம்.
கால்சியம் – 15 மி.கிராம்.
பாஸ்பரஸ் – 21 மி.கிராம்.
இரும்பு – 1.0 மி.கிராம்.
நியாசின் – 0.4 மி.கிராம்.
வைட்டமின் ‘பி1’ – 28 மி.கிராம்.
வைட்டமின் ‘சி’ – 720 மி.கிராம்.