வெள்ளத்திரையில் கோட் சூட் கோபிநாத்

நீயா? நானா? வில் பிரபலமான நமது கோட் கோபிநாத் இப்போது நடிகர். சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் நிமிர்ந்து நில் படத்தில் கோபிநாத்துக்கு அவரைப் போலவே வெயிட்டான ரோலாம். படத்துக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து தொடர்ந்து நடிக்கிற ஐடியா இருக்கிறதாம் கோபிக்கு.

நீயா நானாவின் சூத்ரதாரி ஆண்டனி… ஐயோ அவரும் நடிக்கிறாரா என்று பயப்பட வேண்டாம். படம் தயாரிக்கிறார். இது ஆண்டனியின் நீண்டநாள் திட்டம். சின்னத்திரையில் ஒரு லைஃப் டைம் புரோக்கிராமை தயாரித்தாயிற்று. அதில் அதற்கு மேல் செய்ய எதுவுமில்லை. அதனால் அடுத்தக்கட்டமான சினிமா தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்.

வஸந்தின் சத்தம் போடாதே படத்தில் பிருத்விராஜ் குட்டீஸ்களை தூக்கி வைத்து பாடுவாரே… அழகுக் குட்டிச் செல்வம்… அதுதான் படத்தின் பெயர். நஞ்சுபுரம் படத்தை இயக்கிய சார்லஸ் படத்தை இயக்குகிறார்.

Leave a Reply