பிரதமர் மோடி தலைமையிலான அரசில் மத்திய அமைச்சராக பதவியேற்ற ஒரே வாரத்தில் அமைச்சர் ஒருவர் கார் விபத்தில் மரணமடைந்ததால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவியேற்ற கோபிநாத் முண்டே இன்று காலை சாலை விபத்தில் பலியானார்.
இன்று காலை டெலி விமான நிலையத்திற்கு தனது இல்லத்தில் இருந்து காரில் கிளம்பி சென்ற கோபிநாத் முண்டே, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவசர சிகிச்சை கொடுக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சைக்கு பலனின்றி அவர் மரணம் அடைந்தர்.
கடந்த 26ஆம் தேதி மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட கோபிநாத் முண்டே, மகாராஷ்டிராவின் துணை முதல்வராகவும், மக்களவை உறுப்பினராகவும் ஏற்கனவே பதவியேற்றவர்.
மத்திய அமைச்சர் மறைவிர்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு நாளை மும்பையின் லட்டூரில் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1klgzTv” standard=”http://www.youtube.com/v/CBvv_LkG5Mg?fs=1″ vars=”ytid=CBvv_LkG5Mg&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep4074″ /]