கார் விபத்தில் இறந்த கோபிநாத் முண்டே மகளுக்கு முக்கிய பதவி. பாஜக தலைமை ஆலோசனை

 Pankaja-Munde-PTI1பிரதமர் மோடியின் அமைச்சரவையில் நகர்ப்புற அமைச்சர் பதவியேற்ற மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே, பதவியேற்ற ஒருசில நாட்களிலேயே கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார்.

முண்டேவின் இழப்பால் பாரதிய ஜனதா அதிர்ச்சி அடைந்தது. ஏனெனில் அவரது தலைமையில் தான் எதிர்வரும் மராட்டிய சட்டமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதா திட்டமிட்டு இருந்தது. கோபிநாத் இல்லாமல எவ்வாறு தேர்தலை சந்திப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்த பாஜக தலைமை, தற்போது அதற்கு ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளது.

pankajaகோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜாவுக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுத்து அவரது தீவிர பிரச்சாரத்தின் மூலம் மராட்டிய சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. கோபிநாத்தின் மகள் பிரச்சாரத்திற்கு சென்றால் அனுதாப ஓட்டு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மராட்டிய பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. முதல்கட்டமாக கோபிநாத் முண்டே மகள் பங்கஜாவை, கட்சியின் ஒருங்கிணைப்பு குழுவில் சேர்த்து கொள்வது என்றும் அதன்பின்னர் அவருக்கு கட்சியின் முக்கிய பதவி ஒன்று கொடுக்கப்படும் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த தகவலை கட்சியின் மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் தெரிவித்தார். பங்கஜா, பார்லி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply