நாட்டில் முதல்முறையாக இரு நதிகளை இணணத்து சாதனை செய்த சந்திரபாபு நாயுடு

நாட்டில் முதல்முறையாக இரு நதிகளை இணணத்து சாதனை செய்த சந்திரபாபு நாயுடு
rivers
இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என பல வருடங்களாக முயற்சிகள் மட்டுமே நடந்து வருகின்றது. ஆனால் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகின்றது. இந்நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு நதிகளை இணைத்து சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு சாதனை செய்துள்ளது. ஆந்திராவை பின்பற்றி குறைந்தபட்சம் மற்ற மாநிலங்களாவது ஆறுகளை இணைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த ஆண்டு மீண்டும் ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் ஆந்திராவின் முக்கிய நதிகளான கோதாவரி, மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல் இந்த திட்டம் கடந்த மார்ச் 9ஆம் தேதி தொடங்கப்பட்டது. கோதாவரி நதி தண்ணீரை வாய்க்கால் வழியாக ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள  பட்சீமா கிராமத்தில் கிருஷ்ணா நதியில் வந்து இணையும் படி திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இதற்காக 124 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாய்க்கால் வெட்டவும் ஆந்திர அரசு முடிவு செய்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாவு நாயுடு விஜயவாடாவில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கோதாவரியில் இருந்து வாய்க்கால் வழியாக வந்த தண்ணீர் பட்சீமா கிராமத்தில் கிருஷ்ணா நதியில் திறந்து விடப்பட்டது.  இந்த திட்டத்தின் மூலம் 80 டிஎம்சி தண்ணீர் வீணாவது தடுக்க முடியும். அதோடு இரு நதிகளும் இணையும் பட்சீமா கிராமமும் சுற்றுலாத்தளமாக மாற்றப்பட உள்ளது.
ஆந்திர அரசை தொடர்ந்து தமிழகமும் நதிநீர் இணைப்பு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என தமிழக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply