என்னென்ன தேவை?
பாகற்காய் – 2 (பெரிது)
பெரிய வெங்காயம் – 2
தக்காளிப் பழம் – 2
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
புளி – சிறிதளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கடுகு – அரை தேக்கரண்டி
எப்படிச் செய்வது?
பாகற்காயை விதை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி புளி தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் புளியில் ஊறிய பாகற்காயைப் பிழிந்தெடுத்து வதக்கவும். மற்றொரு வாணலியில் வெந்தயத்தை எண்ணெய்விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பொடியாக, நறுக்கின தக்காளிப் பழத்தை வதங்கின பாகற்காயுடன் சேர்த்துக் கிளறவும். கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக, வதக்கிய வெங்காயம், மற்றவற்றை சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த பாகற்காய் மசாலா கறி சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.