தானாகவே முன்வந்து ஒப்படைக்கப்பட்ட கருப்புப்பண வசூல் ரூ.3,777 கோடி?

தானாகவே முன்வந்து ஒப்படைக்கப்பட்ட கருப்புப்பண வசூல் ரூ.3,777 கோடி?
black money
வெளிநாட்டில் கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் தானாகவே முன்வந்து ஒப்புக்கொண்டால் அதற்குரிய வரியை மற்றும் அபராதத்தை செலுத்தி அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வரலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் கருப்புப்பண பதுக்கல்காரர்கள் இதுவரை ரூ.3,770 கோடி தானாகவே முன்வந்து ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம், மத்திய வரிஆணையம் ‘வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை எப்படி மதிப்பீடு என்பது குறித்த விதிமுறைகளும் வெளியிடப்பட்டன. அசையா சொத்துகள், நகைகள், மதிப்பு மிக்க கற்கள், ஓவியங்கள், பங்குகள் ஆகியவற்றை தற்போதைய சந்தை விலையில் அதற்கான மதிப்பு கணக்கிடப்படும் என்று கூறியிருந்தது.

வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை தாமாக முன்வந்து ஒப்படைப்பதற்காக மத்திய வரி ஆணையம் விதித்திருந்த 90 நாள் கால அவகாசம் நேற்றுடன் முடிவடந்ததை அடுத்து இதுவரை 638 பேர் தாமாக முன்வந்து ரூ.3,770 கோடி வரை தங்களுடை வெளிநாட்டு சொத்துகுறித்து குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களின் பெயர்கள் வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ரூ.3770 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாலும், இத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply