அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு

schoolsபணம் படைத்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினர்களும், ஏழை எளியவர்களும் கூட கடன் வாங்கியாவது தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்கவைக்கும் வழக்கம் நமது நாட்டில் அதிகம் காணப்படுகிறது. தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும், அந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கவே அனைவரும் விரும்புகின்றனர். இந்நிலையில் அலகபாத் உயர்நீதிமன்றம் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி உத்தரப் பிரதேச மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை கண்டிப்பாக அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என்று அரசு தலைமைச் செயலரிடம் அலாகாபாத் உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்த வழக்கை ஒன்றை விசாரணை செய்த நீதிபதி சுதிர் அகர்வால் அவர்கள் இன்று வெளியிட்ட உத்தரவு ஒன்றில், ”தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் அரசு ஊழியர்கள் சேர்த்தால், அவர்கள் தனியார் பள்ளிகளில் செலுத்தும் அதே அளவு பணத்தை அரசுக் கருவூலத்துக்கும் செலுத்துமாறு உத்தரவிடலாம் என்றும் அத்துடன், அவர்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகளையும் ரத்து செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை அவர்கள் சேர்க்கும் பட்சத்தில், அந்தப் பள்ளிகள் நன்றாக இயங்குவதை உறுதிப்படுத்த முடியும் என்றும் அதனால், இதுதொடர்பான நடவடிக்கைகளை அரசு அடுத்த 6 மாதங்களுக்குள் எடுக்க வேண்டும் என்று மாநில தலைமைச் செயலரை இந்த நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது” என்றும் கூறி உள்ளார்

Leave a Reply