கூகுள் டிரைவ் அல்லது டிராப்பாக்ஸ் போன்ற எந்தவொரு அரசு அல்லாத கிளவுட் சேவையிலும், கட்டுப்படுத்தப்பட்ட அல்லது ரகசியமான அரசாங்க தரவுக் கோப்புகளை சேமிக்க வேண்டாம் என அரசு ஊழியர்களை வலியுறுத்துகிறது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Meity) அமைத்த விதிகள், அரசாங்கத்தின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அரசு ஊழியர்கள் தங்கள் மொபைல் போன்களை ‘ஜெயில்பிரேக்’ செய்யவோ அல்லது ‘ரூட்’ செய்யவோ அல்லது “அரசு ஆவணங்களை” ஸ்கேன் செய்ய கேம்ஸ்கேனர் போன்ற வெளிப்புற மொபைல் ஆப் ஸ்கேனர் சேவைகளைப் பயன்படுத்தவோ வேண்டாம்