தமிழகத்தில் 6 இடங்களில் குறைந்த விலையில் மருந்து விற்பனை செய்யும் நிலையங்களை மாநில அரசு தொடங்குகிறது.
தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர் வசிக்கின்றனர். தமிழகம் முழுவதும் 32 ஆயிரத்து 336 தனியார் மருந்து கடைகள் உள்ளன. விலை அதிகமான மருந்துகளை வாங்க முடியாமல் ஏழை-எளிய மக்கள் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டுறவுத் துறை மூலம் 7 இடங்களில் டி.யு.சி.எஸ். மருந்து கடைகள் தொடங்கப்பட்டன. இங்கும் தனியார் மருந்து கடைகளில் விற்கப்படும் விலையிலேயே மருந்துகள் விற்கப்பட்டதால் பொதுமக்களுக்கு எவ்விதமான பயனும் ஏற்படவில்லை.
இந்நிலையில், குறைந்த விலையில் உயர்ந்த உயிர்காக்கும் மருந்து விற்பனையை தொடங்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருந்து விற்பனை ஒரு வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.