இனி விமானங்கள் நெடுஞ்சாலையிலும் இறங்கும். மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தகவல்

இனி விமானங்கள் நெடுஞ்சாலையிலும் இறங்கும். மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தகவல்

flightsவிமானங்கள் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென ஏதாவது அவசர தேவை ஏற்பட்டால் விமானிகள் விமானத்தை சாலையில் இறக்குவதையும் அதனால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து அவ்வப்போது வரும் செய்திகளை பார்த்துள்ளோம். இந்நிலையில் சட்டபூர்வமாகவே விமானங்களை நெடுஞ்சாலைகளில் இறக்கும் வசதியை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாக நெடுஞ்சாலை, சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தெரிவித்தார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

தொலைவிடப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் விமானங்களைத் தரையிறக்கும் வசதியைக் கொண்டுவர பாதுகாப்புத் துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஏனென்றால், அத்தகைய நெடுஞ்சாலைகள் எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ளன. இத்தகைய நெடுஞ்சாலைகள் தார் மற்றும் சிமென்ட் கலவையைக் கொண்டு அமைக்கப்பட உள்ளதால், விமானங்களின் எடையைத் தாங்கும்.

இந்தச் சாலைகளை நாம் தாற்காலிக விமான நிலையங்களாகவும் பயன்படுத்தலாம். இதன்மூலம், விமான நிலையங்களை அமைப்பதற்கும், அவற்றைப் பாராமரிப்பதற்கும் ஆகும் செலவைக் குறைக்கலாம்.

விமானங்கள் தரையிறங்கும் சமயத்தில் மட்டும் அந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். விமானம் தரையிறங்கிய பிறகு, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். விமானங்கள் தரையிறங்கிய பிறகு, சாலையோரங்களில் நிறுத்துவதற்கு வசதியாக இடங்களை அமைக்கவும் ஆலோசனை செய்து வருகிறோம்.

இந்தச் சாலைகளில் பயணிகள் விமானம், ராணுவ விமானம் என இரண்டு வகை விமானங்களையும் தரையிறக்குவது குறித்தும் பரிசீலனை செய்து வருகிறோம்

இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.

Government mulls using highways in far-flung areas for plane landing: Nitin Gadkari

Leave a Reply