தேர்தலை முன்னிடு டீசல் உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு?

7கடந்த சில மாதங்களுக்கு முன் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாதத்தின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உயர்த்திக்கொள்ள அனுமதி கொடுத்திருந்தது. அதன்பின்னர் ஒவ்வொரு மாதமும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த பிப்ரவரி மாத இறுதிநாளில் கூட டீசல் விலை 50 காசு உயர்த்தப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் உயர்த்தப்படும் டீசல் விலையை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் மேலிட தலைவர்களையும், ஆட்சியாளர்களையும் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு, வருங்கால வைப்பு நிதியில் ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம் என சில அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வரும் மத்திய அரசு கூடிய விரைவில் டீசல் விலை உயர்வை மாதந்தோறும் உயர்த்துவதற்கு தடை விதிக்கும் என டெல்லி வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

Leave a Reply