இந்தியாவில் முதன்முறையாக காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க உதவும் புதிய இணையதளம் தொடக்கம்.

childஇந்தியாவில் முதன்முறையாக, காணாமல் போன குழந்தைகள் குறித்து புகார்களை பதிவு செய்யவும், அவர்களைக் கண்டு பிடிக்க உதவம் வகையிலும் புதிய இணையதளம் ஒன்றை தொடங்க மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த இணையதளத்தில் காணாமல் போன குழந்தைகள் குறித்த விவரங்களை பதிவு செய்தால் மிகவிரைவில் அந்த குழந்தைகளை கண்டுபிடித்துவிடலாம் என கூறப்படுகிறது.

மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் www.khoyapaya.gov.in என்ற இணையதளத்தை  நாளை அறிமுகம் செய்யவுள்ளது. காணாமல் போன குழந்தைகளுக்காக இணைய தளம் தொடங்கப்படுவது இந்தியாவில் இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த இணையதளத்தில் காணாமல் போகும் குழந்தைகள் பற்றி புகார் செய்வதுடன், அவர்களது புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை பொதுமக்களே நேரடியாக பதிவு செய்யலாம். காணாமல் போன குழந்தைகள் பற்றிய தகவல் தெரிந்தால் அதுகுறித்தும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

மேலும் காணாமல் போன குழந்தை குறித்து அளிக்கப்பட்ட புகார் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் புகார்தாரர் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் வசதியும் உள்ளது.

இந்த இணையதளத்தில் 3 பிரிவுகள் உள்ளன. ‘எனது குழந்தை காண வில்லை’, ‘ஒரு குழந்தையைக் கண்டுள்ளேன்’, ‘காணாமல் போன குழந்தையை தேடுதல்’ என அமைக்கப்பட்டிருக்கும் இந்த மூன்று பிரிவுகளில் நமக்கு தேவையான பிரிவை தேர்வு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

Leave a Reply