குடிநீர், கூல்டிரிங்ஸை அதிக விலைகு விற்றால் சிறை.
குடிநீர் மற்றும் குளிர்பானங்களை ஒருசில திரையரங்குகள், ஹோட்டல் மற்றும் கடைகளில் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில மாதங்களாக ஏராளமான புகார்கள் அரசுக்கு சென்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் குடிநீர் மற்றும் குளிர்பானங்களின் எம்.ஆர்.பி. விலையை விட அதிகமாக விற்றால் அபராதம் அல்லது சிறைதண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
அதிக விலைக்கு குளிர்பானங்கள் விற்பனை செய்வது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
Chennai Today News: Government warns of fine, jail term for selling water, cold drinks above MRP