போட்டி போட்டு ஆய்வு செய்யும் முதல்வர், கவர்னர். புதுவை மக்கள் ஆச்சர்யம்

போட்டி போட்டு ஆய்வு செய்யும் முதல்வர், கவர்னர். புதுவை மக்கள் ஆச்சர்யம்

pudhuvai pudhuvaiiபாண்டிச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்ததால் அங்கு ஆளும் முதல்வருக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு கிரண்பேடியை கவர்னராக நியமனம் செய்தது என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிப்பதுபோல் கவர்னரும் முதல்வரும் மாறி மாறி புதுவையின் பல்வேறு பகுதிகளில் திடீர் விசிட் அடித்து வருவதை அம்மாநில மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

கவர்னராக பொறுப்பேற்ற ஒருசில நாளிலேயே குப்பை அள்ளும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கிரண்பேடி கேட்டார். அதேபோல் தற்போது முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ள நாராயணசாமி நேற்று திடீரென லாஸ் பேட்டையில் உள்ள வள்ளலார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சருடன் சென்று திடீர் ஆய்வை மேற்கொண்டனர்.

முதல்வர் விசிட் அடித்த ஒருசில மணி நேரங்களில் கவர்னர் கிரண்பேடி நகர பகுதியில் உள்ள சவரிராயலு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு திடீரென விசிட் அடித்தார். அங்கு வகுப்பறைகளை ஆய்வுசெய்த அவர், மாணவிகளுக்கு நல்லொழுக்கக் கதையை பாடமாகவும் எடுத்தார். இனி, தினமும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை அரசு துறைகளுக்குச் சென்று ஆய்வுசெய்ய உள்ளதாக தெரிவித்துவிட்டு புறப்பட்டார்.

கவர்னரும், முதல்வரும் மாறி மாறி விசிட் அடித்து ஆய்வு செய்வதை அம்மாநில மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, “முதல்வர், ஆளுநர் இடையில் போட்டி தொடங்கியுள்ளது போல்தான் தோன்றுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பணியே நடக்காமல் இருந்த புதுச்சேரியில் இந்த மாதிரியான உத்வேகமான நடவடிக்கைகள் சில நம்பிக்கைகளை விதைக்கிறது. ஆனால், இது நாளடைவில் அதிகாரப் போட்டியாக மாறிவிடக் கூடாது. அப்படி மாறினால் வளர்ச்சித் திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு துணைநிலை ஆளுநர், முதல்வர் இடையேயான தன் முனைப்பே முன்நிற்கும்” என்று கூறினார்.

Leave a Reply