ஆளுனர் செய்தது சரிதான்: தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வரட்டும்: எச்.ராஜா
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாகவும், இதனால் சட்டமன்றத்தை கூட்டி முதல்வர் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால் 19 எம்எல்ஏ-க்களும் அதிமுகவில் நீடிப்பதால், சட்டப்பூர்வமாக தலையிட முடியாது என ஆளுநர் ஸ்டாலினின் வேண்டுகோளை கவர்னர் நிராகரித்தார்.
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியபோதும், ‘ஆளுநரின் முடிவு சரியானதே, அவரை தொந்தரவு செய்யாமல், திமுக நேரடியாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர வேண்டும். அதிமுகவில் நடைபெறுவது உட்கட்சி பூசல், ஏன் எதிர்க்கட்சிகள் ஆளுநரை சந்திக்க வேண்டும் என்று எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.