புதுவையில் புரட்சியை தொடங்கினார் கவர்னர் கிரண்பேடி
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி டெல்லி திகார் ஜெயிலில் பல புரட்சிகள், புதுமைகள் செய்து பெயர் வாங்கிய நிலையில் தற்போது புதுச்சேரி கவர்னர் பதவியேற்றுள்ளார். இங்கும் அவர் பல புதுமைகள் செய்து அம்மாநில மக்களின் அன்பை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
சமீபத்தில் புதுவை ஆளுனராக பொறுப்பேற்ற கிரண்பேடி பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ‘வாகனங்களில் சுழல் விளக்குகளை யாரும் பயன்படுத்தக்கூடாது, விஐபிகளுக்காக போக்குவரத்தை நிறுத்தக் கூடாது’ என்று அதிரடி உத்தரவை போட்டார் கிரண்பேடி.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தை சுத்தப்படும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். புதுச்சேரி, ஆம்பூர் சாலையில் துப்புரவு பணியாளர்களுடன் கடந்த ஞாயிறு அன்று சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது, ‘கையில் உறை, முகத்தில் மாஸ்க் போடாமல் யாரும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடக்கூடாது’ என அன்பு கட்டளையிட்டார்.