கவர்னருடன் ஓபிஎஸ்-எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு. ஆட்சி அமைப்பது யார்?
கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் ஏற்பட்டிருந்த குழப்பங்களுக்கு இன்று விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவ் தனித்தனியே சந்தித்து ஆலோசனை செய்தார். அவர் இன்று தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களுக்கு 214 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்தும், சிறை வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் விடுதலை செய்யப்பட்டால் அனைவரும் தன்னை ஆதரிப்பார்கள் என்று ஓபிஎஸ் தரப்பிலும் கூறப்படுகிறது.
எனவே சட்டமன்றத்தை கூட்டி யாருக்கு ஆதரவு என்பதை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இருவரும் தங்கள் பலத்தை நிரூபிக்காத பட்சத்தில் சட்டசபை முடங்கவோ அல்லது குடியரசு தலைவர் ஆட்சி அமையவோ வாய்ப்பு உள்ளது.