இந்தியாவில் அதிகம் பேசப்படும் ஒரே மொழி இந்திதான்: ஆளுநர் ரவி
நிர்வாக ரீதியாக மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவதில் தவறில்லை என்றும் ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் காரணத்திற்காக ஒன்றிய அரசு என்று கூறுகிறார்கள் என்றும் ஆளுனர் ரவி தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற யாரும் பிரச்சனை செய்ததில்லை என்றும் ஒரு இந்திய மொழியை கூடுதலாக கற்றுக் கொள்வது அனைவருக்கும் பயன் தரும் என்றும் தெரிவித்தார்
இந்தியாவில் அதிகம் பேசப்படும் ஒரே மொழி இந்திதான் என்றும் எனவே இந்தியை கற்றுக் கொள்வது பெரிய அளவில் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்