தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா இயற்றப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற மசோதா சமீபத்தில் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா குறித்து எந்தவித முடிவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எடுக்காமல் இருந்த நிலையில் தற்போது நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார் என்றும், சட்டப்பேரவையில் மறுபரிசீலனை செய்ய மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளதாக ஆளுனரின் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.