ஆளுனர் வெளியேற வேண்டும்: எம்.எல்.ஏக்கள் முழக்கத்தால் பரபரப்பு!
ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற வேண்டும் என எம்எல்ஏக்கள் முழக்கம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆன்லைன் மசோதாவுக்கு அனுமதி தராத ஆளுநர் தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்றும் எனவே அவர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் எம்எல்ஏக்கள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.
இன்று காலை சட்டப்பேரவை தொடங்கியவுடன் ஆளுநர் தனது உரையை ஆரம்பித்ததிலிருந்து எம்எல்ஏக்கள் தொடர்ந்து அவரைப் பேசவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் எதிர்ப்பையும் மீறி ஆளுநர் தனது உரையை அமைதியாக முடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன