ஆளுனர் அறிக்கை அனுப்பினாரா இல்லையா ?
தமிழகத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி, ஆளுனர் செயல்படாமல் இருந்தது குறித்து விமர்சனங்கள் சொல்லிய நிலையிலேயே இன்றைய ஆளுனரின் அறிக்கை கசிய விடப்பட்டது.
எந்த அறிக்கையும் அனுப்பாமல் ஆளுனர் டிஜிபி, ஆணையர் தலைமைச் செயலர் ஆகியோரை சந்திக்க வேண்டிய அவசியம் கிடையாது. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பினரை சந்தித்த பிறகு நடந்தது என்ன என்றும், தமிழக சூழல் குறித்த விபரங்களையும் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டியது அவரது கடமை. அந்த அடிப்படையில் அறிக்கை நிச்சயமாக அனுப்பியுள்ளார்.
கையெழுத்திடப்படாத அறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதால், அதை மறுப்பது தற்போது எளிதாக உள்ளது அவர்களுக்கு.
ஒரு ஆளுனரின் அறிக்கை போல போலியான ஒன்றை தயாரித்து, அதை ஊடகங்களுக்கு அனுப்பி, அவர்களும் சரிபார்க்காமல் ஒளிபரப்பி விட்டார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. ஆளுனர் அறிக்கை போல போலி அறிக்கை தயாரித்தால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்
மேற்கண்ட சந்தேகத்தை சவுக்கு சங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.