ஓபிஎஸ் ராஜினாமாவை திரும்ப பெற்றால் ஆளுனர் ஒரு முட்டாள். சுப்பிரமணியன் சுவாமி

ஓபிஎஸ் ராஜினாமாவை திரும்ப பெற்றால் ஆளுனர் ஒரு முட்டாள். சுப்பிரமணியன் சுவாமி

தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பாக இருக்கும் இச்சமயத்தில், ‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை தமிழக ஆளுநர் சட்டப்படி முதல்வராக்க வேண்டும்’ என பா.ஜ.க-வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில்,

தமிழக மக்கள் அனைவருமே சசிகலா முதல்வராக கூடாது என்று கொதித்தெழுந்து வரும் நிலையில் எப்போதுமே தமிழக மக்களின் எண்ணங்களுக்கு எதிராக இருக்கும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போதும் அதேபோல் சசிகலாதான் சட்டப்படி முதல்வராக வேண்டும் என்று கூறி வருகிறார்.

சட்டம் என்பது மக்களின் நலனுக்காகத்தான். மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தால் சட்டத்தைத்தான் திருத்த வேண்டுமே தவிர, மக்களின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்ய கூடாது. இதைத்தான் ஜல்லிக்கட்டு போராட்டு அனைவருக்கும் உணர்த்தியது.

இந்நிலியில் பி.பி.சி  தமிழுக்கு அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘எல்லாம் சட்டப்படி தான் நடக்க வேண்டும். சசிகலாவைப்பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. ஆனால் அவரது உரிமையை சட்டத்தை மீறி பறிக்க வழியில்லை. வி.கே.சசிகலாவை ஆளுநர் சட்டப்படி முதல்வராக்க வேண்டும். ஆளுநர் தவறு செய்திருக்கிறார். கண்டிப்பாக சென்னையில் இருந்திருக்க வேண்டும். அவர் தவறிழைத்திருக்கிறார்.

நிர்ப்பந்தத்துக்குப் பயந்து ராஜினாமா செய்திருந்தால், ஓ.பன்னீர்செல்வம் ஒரு பயந்தாங்கொள்ளி. முதலமைச்சர் ஆவதற்கு அவருக்குத் திறமை கிடையாது. அவருக்கு அந்த அந்தஸ்து கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் அளித்த ராஜினாமா கடிதத்தைத் திரும்பப்பெற்றால் ஆளுநர் ஒரு முட்டாள்” எனத் தெரிவித்துள்ளார்

Leave a Reply