வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 12 தொண்டு நிறுவனங்கள் உள்பட 69 தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து நிதி பெற தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து லோக்சபாவில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறியதாவது: இந்தியாவில் இயங்கி வரும் ஒருசில தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து தங்களுக்கு வரும் நிதியை தவறாக பயன்படுத்துவதாக வந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து தமிழகத்தை சேர்ந்த 12 தொண்டு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 69 தொண்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தைச் சேர்ந்த 14 தொண்டு நிறுவனங்கள், குஜராத், ஒடிஸா மாநிலங்களைச் சேர்ந்த தலா 5 நிறுவனங்களுக்கும் இந்த தடை பொருந்தும். மேலும் உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கேரள மாநிலங்களைச் சேர்ந்த தலா 4 நிறுவனங்கள், தில்லியைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.