அரசு ஊழியர்கள் ஜிமெயில் உள்பட தனியார் இமெயிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பில், சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
*அரசு அலுவலக வலையமைப்பிலிருந்து ஜிமெயில் உள்பட தனியார் மின்னஞ்சல் சர்வர்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
*அலுவல் ரீதியிலான கடித தொடர்புகளுக்கு, அரசால் அங்கீகாரம் பெற்ற மற்றும் செயல்பாட்டு முகவாண்மை (என்ஐசி) அமைப்புகள் மூலம் மட்டுமே மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
*அரசு அலுவல் சார்ந்த மின்னஞ்சல்களை அரசு சாரா மின்னஞ்சல் சேவை தளங்களுக்கு மேலனுப்புவதற்கும் (ஃபார்வர்டு) தடை விதிக்கப்பட்டுள்ளது.
*இந்த புதிய கொள்கை, மத்திய அரசு வழங்கும் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தும் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.
*புதிய கொள்கைப்படி அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பதவியின் பெயரிலும் குறிப்பிட்ட நபரின் பெயரிலும் என தலா 2 மின்னஞ்சல் முகவரிகள் ஒதுக்கப்படும். தில் தனிப்பட்ட கடிதப் போக்குவரத்துக்கு தங்களது பெயரில் உள்ள முகவரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விக்கிலீக்ஸ் உரிமையாளர் எட்வர்டு ஸ்னோடென் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இண்டர்நெட் மற்றும் இமெயில் தகவல்களை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் வேவு பார்ப்பதாக கூறியதை அடுத்து இந்திய அரசு இந்த அதிரடி அறிவிப்பை செய்துள்ளதாக கூறப்படுகிறது.