11 லட்சம் போலி பான் கார்டுகள் நீக்கம்! ஆதாருடன் இணைத்ததால் கிடைத்த நன்மை

11 லட்சம் போலி பான் கார்டுகள் நீக்கம்! ஆதாருடன் இணைத்ததால் கிடைத்த நன்மை

ஆதார் அட்டையுடன் பான் கார்டு இணைத்ததால் ஏராளமான போலி பான் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை நீக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் . ஒரே சமயத்தில் மிக அதிக அளவில் பான் கார்டுகள் நீக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதிலும் இறந்தவர் பெயரில் பான் கார்டு பெறுவது, ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பான்கார்டு பெறுவது குறித்த புகார்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் தற்போது சுமார் 11 லட்சம் போலி பான்கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதியாகும். பான் அட்டை செயல்பாட்டில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்கு https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLinkGS.html என்ற இணைய தளத்துக்குச் சென்று விவரங்களை பதிவு செய்தால் பான் அட்டையின் தற்போதைய நிலவரம் தெரியும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply