தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
வரும் மே மே 17ம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையவுள்ளதை அடுத்து 18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் அரசு அலுவலங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது
மேலும் அரசு ஊழியர்களுக்கு இனி ஆறு நாள் வேலை நாட்கள் என்றும் சனிக்கிழமையும் அரசு ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக அரசு அலுவலங்கள் பூட்டப்பட்டு இருந்ததால் அதனை ஈடுகட்ட தமிழக அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது