தாஜ்மஹாலை அழகுபடுத்த அரசின் புதிய முயற்சி
உலக அதிசயங்களில் ஒன்றாவும், காதலர்களின் நினைவுச்சின்னமாகவும், இந்தியாவின் முக்கிய சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாகவும் விளங்கி வரும் தாஜ்மகால், தனது இயல்பு தோற்றமான சுத்தமான வெள்ளையிலிருந்து பழுப்பாக மாறி வருவதால் தாஜ்மகால் நிறம் மாறுவதிலிருந்து காக்க அரசு ஒரு புதிய முயற்சியை செய்துள்ளது.
அழகிய தாஜ்மகால் பழுப்பு நிறமாக மாறுவதற்கு காரணம் அதன் சுற்றுப்புறத்தில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தான் என்ற அதிர்ச்சி ஆய்வு முடிவு வெளியாகியுள்ளதை அடுத்து அரசு இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
கடந்த 17ம் நூற்றாண்டில் வெள்ளை மார்பில் கற்களால் கட்டப்பட்ட தாஜ்மகால், பழுப்பு நிறமாக மாறியுள்ளதால் அதன் அழகை காக்கும் பொருட்டு மத்திய அரசு அதற்கு ‘Mud Therapy’ என்ற புதிய முயற்சியில் அழகுபடுத்த முடிவெடுத்துள்ளது.
மட் தெரபி என்றால் பெண்கள் தங்கள் அழகை பாதுகாக்க போட்டுக்கொள்ளும் மேக்கப் போன்றது தான். தாஜ்மகால் மீது மட் தெரபி மூலம் பூசப்படும் பூச்சு, அதன் நிறத்தை அப்படியே காத்து, அதன் அழகை அதே பொழிவோடு இருக்க உதவும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது