குரோஷியா நாட்டின் முதல் பெண் அதிபர் கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் நேற்று பதவியேற்றார். அவருக்கு உலகத்தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் குரோஷியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் இவோ ஜோசிபோவிக்கை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் வெற்றி பெற்றார்.
கடும் பொருளாதார மந்தநிலை நிலவி வரும் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடான குரோசியாவில் அதிபர் பொறுப்பை ஏற்றுள்ள கொலிண்டாவுக்கு பெரும் சவால் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கொலிண்டா கிராபர், “குரோஷியாவை வளமான நாடாக மாற்ற பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
பதவியேற்பு விழாவில் அல்பேனியா, போஸ்னியா – ஹெர்சகொவினா, ஹங்கேரி, கொசோவா, மேசிடோனியா, மான்டிநீக்ரோ, ஸ்லோவேக்கியா, ஸ்லோவேனியா, செர்பியா உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் பங்கேற்றனர்.