இங்கிலாதில் உள்ள போர்ட்ஸ்மவுத் என்ற நகரில் 50 வயது பாட்டி ஒருவர் தனது பேரன்களுக்கு மக்காச்சோளம் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை சாப்பிட கொடுத்தபோது அதில் இறந்த எலி ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த சிப்ஸ் பாக்கெட் தயாரித்த நிறுவனம் மீது வழக்கு தொடர் அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள போர்ட்ஸ்மவுத் என்ற நகரில் வாழும் பவுலின் ஹெலன் என்ற 50 வயது பாட்டி தனது ஐந்து பேரன்களுடன் வாழ்ந்து வருகிறார். இவர் நேற்று தனது பேரன்களுக்கு கிரன்ச்சி நட்” என்ற நிறுவனம் தயாரித்த மக்காச்சோளம் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை எடுத்து சாப்பிட கொடுத்தார். அந்த பாக்கெட்டை பிரித்து ஒரு தட்டில் சிப்ஸை கொட்டும்போது சிப்ஸுடன் சேர்த்து ஒரு இறந்த எலி இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
தான் தான் அந்த சிப்ஸ் பாக்கெட்டை வாங்கிய சூப்பர் மார்க்கெட்டில் புகார் செய்தார். அவர்களும் உடனடியாக இதுகுறித்து கிரன்ச்சி நட் நிறுவனத்திற்கு புகார் அனுப்புவதாக கூறினர். ஆனால் இதில் சமாதானம் ஆகாத ஹெலன், தனது வழக்கறிஞருடன் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர ஆலோசித்து வருகிறார்.
இதுகுறித்து உடனடியாக விசாரணை செய்வதாகவும், இதுபோன்ற தவறுகள் இனிமேல் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்வதாக கிரன்ச்சி நட் நிறுவனம் சமாதானம் செய்து ஹெலன் வழக்கு தொடர்வதில் தீவிரமாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.