• அஞ்சு மாதக்குழந்தை வயிறு வலிச்சு அழறதுனு வச்சுக்கோங்க… கடுக்காயை சந்தனம் மாதிரி உரசி குழந்தையோட வயித்துல சதும்பப் பூசி விடணும். ஒரு வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடணும். ரெண்டே நிமிஷத்துல வலி நீங்கி, குழந்தை சிரிக்கும்.
• சில குழந்தைகளுக்கு வாயில மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி, அந்த விழுதை குழந்தையோட நாக்குல தடவுனா போதும்… பிரச்சனை சரியாகிடும். சின்னக் குழந்தை வாந்தி பண்ணினா, வசம்பை சுட்டு பொடி பண்ணி ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினா, சட்டுனு குணம் கிடைக்கும். வசம்புக்கு ‘பிள்ளை வளர்ப்பான்’னு பேரே உண்டு!
• ஆறு மாசக் குழந்தைனா, பத்து நாளுக்கு ஒருமுறை ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீர்ல கலந்து, ஒரு பாலாடை அளவு புகட்டினா, குழந்தைக்கு வயித்துல வாயு சேராம இருக்கும்.
• பிறந்த குழந்தைக்கு தலையில நல்லெண்ணெய் தேய்க்கக் கூடாது! தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கணும். குழந்தை தலையிலும், உடம்புலயும் தேய்க்கத் தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வச்சு, அதுல ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் விடுங்க. அது படபடனு கொதிச்சு அடங்கினதும் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க. குழந்தைக்கு ஒரு வயசு வரை இந்த எண்ணெயைத்தான் தேய்க்கணும். ஆனா, இந்த எண்ணெய் நல்லா போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்ச்சு குளிப்பாட்டணும். இப்படி செஞ்சு வந்தா குழந்தைக்கு உடம்புல சொறி, சிரங்குனு எதுவும் வராம, மேனி பட்டு போல இருக்கும்.
• கைக்குழந்தைகளுக்கு தடுக்குனு ஜலதோஷம் பிடிச்சுக்கும். அப்படி சளித் தொல்லையால குழந்தை அவதிப்பட்டா, கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்ல, ரெண்டு பல் பூண்டைப் போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பால்ல கலந்து, ரெண்டு டேபிள்ஸ்பூன் கொடுத்தா… சளி அத்தனையும் மலத்துல வெளியேறிடும்.