மகாத்மா காந்தியின் பேரன் காலமானார்.
இந்திய சுதந்திரத்திற்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரன் கானு ராம்தாஸ் காந்தி காலமானார். அவருக்கு வயது 87
கடந்த 1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் செய்த போது அவருடன் சிறு பையனாக இருந்து அந்த சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டவர் கானு ராம்தாஸ் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் மாதம் மாரடைப்பு மற்றும் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் இருந்த அவர், சூரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி நேற்று காலமானார். அவருடைய உடலுக்கு அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த கனுபாய் காந்திக்கு, குழந்தைகள் யாரும் இல்லை. அவரது மனைவி சிவலஷ்மி (90) மட்டும் உள்ளார். கனுபாயின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இறுதிச் சடங்குப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.