சென்னை – ஓட்டேரி, கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 70). இவர் வீட்டில் மேளம் செய்யும் தொழில் செய்து வந்தார். ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். இவரது கணவர் ராஜேஸ்வர ராவ் இறந்துவிட்டதால், அப்பகுதியில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் முதல் மாடியில் தனியாக வசித்து வந்தார்.
இவருக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் ஒரு மகன் அவர் குடியிருக்கும் கீழ் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு இரவு வழக்கம்போல் தூங்கினார்.
நேற்று காலை 12 மணி வரை அவர் வீட்டிலிருந்து வெளியே வராததால் அதே பகுதியை சேர்ந்த அபிராமி என்ற பெண் முனியம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் விசாரணை செய்தததில் அவர் பேரனே முனியம்மாளை கொலை செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.