நியூயார்க் நகரை சேர்ந்த இலியனார் கன்னிங்ஹாம் என்ற பெண் கடந்த வாரம் தனது 100வது பிறந்த நாளை மிகவும் வித்தியாசமாக கொண்டாடினார். தன்னுடைய 100வது பிறந்தநாள் தன்னுடைய வாழ்வில் மறக்கமுடியாத நாளாக இருக்கவேண்டும் என்பதற்காக வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்தார்.
இதன்படி தனது 100வது பிறந்த நாளில் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் ஸ்கை-டைவிங் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை குடும்பத்தினர்களிடம் அவர் தெரிவித்தார்.
அவருடைய ஆசையை பூர்த்தி செய்ய விரும்பிய குடும்பத்தினர் தேர்ச்சி பெற்ற ஸ்கை -டைவிங் வீரர்களுடன் சேர்ந்த இலியனார் அவர்களை குதிக்க வைக்க ஏற்பாடு செய்தனர்.
அதன் பின்னர் கடந்த சனிக்கிழமை பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த ஒரு ஸ்கை-டைவிங் வீரர் ஒருவருடன் இணைந்து பாராசூட் மூலம் மேலே இருந்து குதித்து இந்த பெண்மணி சாதனை படைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘இந்த அனுபவம் தனக்கு மிகவும் த்ரில்லிங்காக இருந்தது என்றும், இந்த அனுபவத்தை தன்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.