கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: கட்டடங்கள் சரிந்தன.
கடந்த 2010ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 51 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று துருக்கியின் அண்டைய நாடான கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லையென்றாலும் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆனதால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து நடுரோட்டில் பரிதாபமாக நிற்கின்றனர்.
ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சுமார் 2 நிமிடங்கள் தொடர்ந்து நீடித்தது. இந்த நிலநடுக்கத்தால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களில் 10 பேரை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
வீடுகளை இழந்து தவிப்பவர்கள், தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம் துருக்கி, இஸ்தான்புல், ஏதென்சிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.