கிரீஸ் பிரதமர் திடீர் ராஜினாமா? அடுத்த மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பு

கிரீஸ் பிரதமர் திடீர் ராஜினாமா? அடுத்த மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பு

greeceபொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் கிரீஸ் நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று கிரீஸ் பிரதமர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டே அவர் இந்த  முடிவை எடுத்திருக்க கூடும் என கிரீஸ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சிலவருடங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கிரீஸ் நாட்டுக்கு நிதி உதவி அளித்த ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் பொருளாதார சிக்கலில் இருந்து விடுமுறை சில கடுமையான வழிமுறைகளையும், சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தன. பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு கீரிஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் வேறு வழியின்றி இதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான கடன் ஒப்பந்தத்திற்கு சிப்ராஸ் சார்ந்திருந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு நிலவியது.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய சிப்ராஸ் ”கடன் அளித்த சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மிகக் கடினமான மற்றும் முக்கிய காலகட்டம் கடந்துவிட்டது. இந்த ஒப்பந்தம் குறித்து நாட்டு மக்கள் என்ன கருதுகிறது என்பதைச் சொல்ல அனுமதிக்க வேண்டிய எனது கடமை. எனவே ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க போகிறேன்” என அறிவித்துள்ளார். தேர்தல் தேதி பற்றி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி தேர்தல் நடக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply