வாக்கெடுப்பு முடிவு எதிரொலி. கிரீஸ் நாட்டின் நிதியமைச்சர் ராஜினாமா

வாக்கெடுப்பு முடிவு எதிரொலி. கிரீஸ் நாட்டின் நிதியமைச்சர் ராஜினாமா

greeceகடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் கிரீஸ் நாடு, ஐரோப்பிய நாடுகள் விதித்த நிபந்தனையை ஏற்பதா? வேண்டாமா? என்று நேற்று நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் நிபந்தனையை ஏற்கவேண்டாம் என 62% மக்கள் வாக்களித்துள்ளதை அடுத்து கிரீஸ் நாட்டின் நிதியமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிரீஸ் நாடு தற்போது பல லட்சம் கோடி கடனில் இருக்கின்றது. ஐரோப்பிய யூனியன், மத்திய வங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, பின்லாந்து உள்பட பல நாடுகளில் கடன் வாங்கியுள்ள கிரீஸ், எந்த நாட்டிற்கு பணத்தை திருப்பித்தர முடியாத நிலையில் இருக்கின்றது. கிரீஸ் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், பங்கு சந்தையும் மூடப்பட்டுவிட்டது. கடன் கொடுத்த நாடுகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியை தவிர்க்க வரி உயர்வு, மானியங்கள் ரத்து, சம்பளம் குறைப்பு போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நிபந்தனைகள் விதித்துள்ளது. இதுகுறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த பிரதமர் அலெக்சில் டிப்ராஸ் உத்தரவிட்டார்.

இந்த வாக்கெடுப்பில் 61 சதவீம் பேர் ஐரோப்பிய நாடுகளின் நிபந்தனைகளை ஏற்கவேண்டாம் என்றும் 39 சதவீதம் பேர் ஏற்கலாம் என்றும் வாக்களித்துள்ளனர்.

கடன் வழங்கிய நாடுகள் மற்றும் அமைப்பின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என மக்கள் வாக்களித்துள்ளதால் இனிமேல் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து கிரீஸ் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ‘யூரோ’ நாணயத்தையும் கிரீஸ் இனிமேல் பயன்படுத்த முடியாது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே கிரீஸ் நாட்டின் நிதி மந்திரி யானிஸ் வருபாகிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடன் வழங்கிய ஐரோப்பிய நாடுகளின் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என மெஜாரிட்டி மக்கள் வாக்களித்துள்ளதை அரசு வரவேற்று இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

Leave a Reply