பச்சைப் பயறு கட்லட்

p27d

தேவையானவை:

பச்சைப் பயறு – 1/4 கிலோ

கேரட், பீன்ஸ் – தலா 50 கிராம்

மஞ்சள் தூள் – சிறிதளவு

பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து அரைத்தப்பொடி (கரம் மசாலா) – சிறிதளவு

வெங்காயம் – 2

உப்பு, எண்ணெய் – தேவையான  அளவு

காய்ந்த பிரெட் தூள் – சிறிதளவு

செய்முறை: பச்சைப் பயறைத் தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி,  வெங்காயம், கேரட், பீன்ஸ், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், வேகவைத்த பச்சைப் பயறுடன் வதக்கிய பொருட்களைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இதனுடன், காய்ந்த பிரெட் தூள் சேர்த்து, வடை மாவுப் பதத்துக்குப் பிசைந்து, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும்.

பலன்கள்: மற்ற பயறுகளைவிட புரதச்சத்து நிறைந்தது பச்சைப் பயறு. உடலுக்கு வலுவூட்டும். சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்தாகப் பச்சைப் பயறு கருதப்படுகிறது. நரை, பிணி, மூப்பு போன்றவற்றைத் தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு. பைட்டோ கெமிக்கல்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவையும் இதில் நிறைந்திருக்கின்றன. வளர்இளம் பருவத்தினர் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

Leave a Reply