தேவையான பொருட்கள்:
மாங்காய் – 1
புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு,
தக்காளி – 1
தாளிப்பதற்குத் தேவையானவை
கடுகு – 1 தேக்கரண்டி
உ.பருப்பு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
கறிவடகம் – 1 தேக்கரண்டி
சி.வெங்காயம் – 10,
கறிவேப்பிலை.
வறுத்து அரைக்க தேவையானவை
வரமிளகாய் – 5,
மல்லி விதை – 4 தேக்கரண்டி
மிளகு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
சி. வெங்காயம் – 6,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
தேங்காய் துருவல் – 1/2 கப்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் 5 தேக்கரண்டி ஊற்றி தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து தக்காளியையும் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை போட வேண்டும். அதில் புளியை கரைத்து ஊற்ற வேண்டும். நறுக்கிய மாங்காயை போட்டு உப்பு சேர்க்க வேண்டும். அடுப்பை ஸிம்மில் வைத்து கொதிக்க விட்டு எண்ணை தெளிந்ததும் இறக்க வேண்டும்.